கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது கொரோனா காலம் என்பதால் கடந்த இரண்டு இடைவெளிக்கு பிறகு இந்த வருடம் 14-ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை நாட்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் இத்திருத்தலத்தில் தமிழ் வளர்த்த வீரமாமுனிவரால் 1720 இல் கட்டப்பட்ட இத்திருத்தலத்தில் திருச்சி மறைமாவட்டத்தின் ஆயர் வேதகுரு முனைவர் ஆரோக்கியராஜ் சவரிமுத்து அவர்களின் திருப்பலி நிறைவேற்றிய பிறகு புனித பெரியநாயகி அன்னையின் கொடியினை ஏற்றி திருவிழாவினை தொடங்கி வைத்தார், முன்னதாக புனித பெரியநாயகி அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கெடிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டு அதனை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து கொடியேற்றினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் வருகின்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் திருத்தல பாரம்பரியத்தின் படி குருத்துவத்தில் வெள்ளி விழா காணும் அருட்தந்தையர்கள் புதிய குருக்கள் மண்ணின் மைந்தர்கள் மற்றும் புனித பெரியநாயகி அன்னையின் பெயர் தாங்கிய குருக்கள் என அனைவரையும் வரவழைத்து அவர்களது தலைமையில் திருப்பாலி நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் இத் திருவிழா நாட்களில் உலக அமைதிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன மேலும் இந்நிகழ்ச்சியில் திருமண விழாவில் இவ்வாண்டு பொன்விழா மற்றும் வெள்ளி விழா காணும் தம்பதியருக்காகவும் புதுமணத் தம்பதியருக்காகவும் சிறப்பு வேண்டுதல்கள் செய்யப்பட்டது...


No comments:
Post a Comment