வடலூர் தூய இருதைய ஆண்டவர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில்
தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் பொதுமக்கள் புதுப்பானையில் பொங்கல் இட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள புனித ஜான் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் லூர்து ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் ஆலயத்தில் புதிதாக 8 பெண்கள் பணிக்குழு தொடங்கப்பட்டு பனிக்குழுவில் உள்ள நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்


No comments:
Post a Comment