விருத்தாசலம் அருகே வயல்வெளியில் கவிழ்நத அரசு பேருந்து - பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

விருத்தாசலம் அருகே வயல்வெளியில் கவிழ்நத அரசு பேருந்து - பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

விருத்தாசலம் அருகே வயல்வெளியில் கவிழ்நத அரசு பேருந்து, பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் லேசான காயம் மருத்துவமனையில் அனுமதி.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையித்தில் இருந்து நாள் தோறும் ஆண்டிமடம்,கிராமத்திற்ககு அரசு பேருந்து செல்கிறது,இந்த நிலையில் இன்று காலை ஆண்டிமடத்திலிருந்து அழகாபுரம் ஓலையூர் வண்ணான் குடிக்காடு புத்தூர் கருவேப்பிலங்குறிச்சி வழியாக விருத்தாசலம் வரை சென்று கொண்டிருந்த அரசு பேருத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒலையூர் கிராமத்தின் வழியாக வந்த போது


ஒத்தையடி பாதையில் சென்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தவர்களுக்கு வழிவிட பேருந்து முற்பட்ட பொழுது திடீரென நிலை தடுமாறிய பேருந்து வயலில் கவிழ்நது விபத்துக்குளானது. இதில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மாணவிகள் வயலில் விழுந்தனர் மேலும் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஜன்னல் வழியாகவும் படிக்கட்டு வழியாகவும் பொதுமக்கள் மாணவர்கள் தப்பித்து ஓடினர்,இதில் பயனித்த பள்ளி மாணவர்கள் உட்பட  10 க்கு மேற்பபட்டோர் படுகாயம் அடைந்தனர் காயம் அடைந்த வரை விருத்தாசலம் அரசு மருந்துவதனையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்



.விபத்து குறித்து அறிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர்.. தகவல் அறிந்து வந்த கருவேப்பிளங்ககுறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/