குளத்தில் மூழ்கி துப்புரவு பணியாளர் பலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

குளத்தில் மூழ்கி துப்புரவு பணியாளர் பலி

குளத்தில் மூழ்கி துப்புரவு பணியாளர் பலி


கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எல்லக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்  கோவிந்தராஜ் வயது 45 த/பெ மாயவன் 


இவர் அதே கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணி செய்து வருகிறார். 


இவர்  அதிகாலை பணிக்கு செல்ல கிளம்பிய போது அதே பகுதியில் உள்ள காலனி குளத்தில்  இறங்கி குளித்த பொழுது  நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் உடலைப் பார்த்த அப்பகுதி  பொதுமக்கள்  மருதூர் காவல்துறையினருக்கு   கொடுத்த தகவலின்  அடிப்படையில் அங்கு வந்த புவனகிரி  காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான காவல்துறையினர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



பின்னர் இறந்தவரின் மனைவி நிர்மலா மருதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


குளத்தில் குளிக்க சென்ற துப்புரவு பணியாளர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

*/