கடலூர் மாவட்டம் வடலூர் குறுக்கு சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களின் மகன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்விற்கு காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சக்கரையாஸ் அவர்கள் தலைமையில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் சிங்காரம் அவர்கள் மற்றும் நகர செயலாளர் குப்புசாமி கணேசன் அவர்கள் முன்னிலையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஐ என் டி சி பிரிவு மாவட்ட தலைவர் முனைவர் ஏ சி டி தனகேசவ மூர்த்தி ,எஸ்சி எஸ்டி பிரிவு நகர தலைவர் ராமலிங்கம், நகர பொருளாளர் சம்பத்குமார், வடலூர் 19வது வார்டு ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
No comments:
Post a Comment