வடலூரில் இந்தியன் வங்கி ATM ஐ உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபர்கள் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

வடலூரில் இந்தியன் வங்கி ATM ஐ உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபர்கள் கைது

வடலூரில்  இந்தியன் வங்கி   ATM ஐ உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்


கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ராகவேந்திரா சிட்டி பகுதியில் இந்தியன் வங்கி இயங்கி வருகின்றது.


இந்த வங்கிக்கு அருகாமையில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த 19.12.2022 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் நான்கு நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அருகே சென்று பணம் எடுப்பது போல் நடித்து.


 பையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ஏ.டி.எம்மை உடைக்க முற்பட்ட பொழுது


ஏடி.எம்.மில் இருந்த அலாரம் ஓலித்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.



பின்னர் சம்பவம் குறித்து இந்தியன் வங்கியின் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் ஏ.டி.எம் மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில்


அவர்கள் வடலூர் கணபதி நகர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 56


நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 

ராஜா ,சண்முகம். 


மற்றும் வடக்குத்து பவுனாம்பால் நகர் பகுதியை சேர்ந்த சந்தானம் என்பது தெரியவந்தது. 


பின்னர் 3 நபர்களை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சண்முகத்தை வலை வீசி தேடி வருகின்றனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

*/