சேத்தியாத்தோப்பு அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அம்மன்குப்பம் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகள் எதிர்பாராமல் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏமான அருண்மொழிதேவன் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கும் புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளரும், அதிமுக ஒன்றிய பெருந்தலைவருமான சி.என்.சிவப்பிரகாசம் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
பின்னர் புதிய வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைக் கழக செயலாளர் பிருத்திவி, கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜ் அதிமுக நிர்வாகி ஜெயசீலன், சாமிநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment