கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்று வரும் இந்த வார சந்தையானது நூறு ஆண்டுகளைக் கடந்து பாரம்பரிய சந்தையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு தினங்களில்வர இருக்கின்ற பொங்கல் விழாவை முன்னிட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வார சந்தையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் பசுமையான காய்கறிகளையும், சுத்தமான மளிகை பொருட்களையும் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு தரமான பொருட்களுக்கு விலையும் மலிவாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர். வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்தப் பாரம்பரிய சந்தையில் கத்திரிக்காய் முதல் கருவாடு வரை அனைத்து விதமான காய்கறிகளும் பசுமையாகவும் உடனடியாகவும் கிடைப்பதால் சந்தைக்கு வரும் ஆண்களும், பெண்களும் அனைத்து காய்கறி , மளிகை பொருட்களையும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.
எந்தவித தலையிடும் இல்லாமல் கிராம மக்கள், விவசாயிகள் என பங்கேற்று நடைபெற்று வரும் இந்த வார சந்தை சந்தையை சுற்றி உள்ள ஐம்பதற்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.இன்று விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டு இருக்க அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சேத்தியாத்தோப்பு வாரசந்தைக்கு வந்தால் எல்லா பொருட்களையுமே நம்மிடம் இருக்கும் காசுக்கு வாங்கி செல்லலாம் என்ற அடையாளப்படுத்தும் ஒரே சந்தையாக இந்த வாரச்சந்தை இருந்து வருகிறது.


No comments:
Post a Comment