கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்று அரசு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகளிர் சுய சார்பு குழு உறுப்பினர்கள் சத்துணவு அமைப்பாளர் பள்ளிக்கல்வித்துறை போன்று துறைகள் இணைந்து மருதூர் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கரும்பு, மஞ்சள் மற்றும் பல வகையான காய்கனிகளை வைத்து பானையில் பொங்கலிட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொங்கல் பானையில் அரிசியிட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக ஊராட்சி செயலாளர் சி.பழனி இளங்கோவன் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:
Post a Comment