பின்னலூர் கிராமத்தில் கண் தானம் உடல் தானம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 January 2023

பின்னலூர் கிராமத்தில் கண் தானம் உடல் தானம்

பின்னலூர் கிராமத்தில் கண் தானம் உடல் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!



கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பின்னலூர் கிராமத்தில் வசித்து வரும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவரும் புவனகிரி ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பி.சா.துரைமணி ராஜன் அவர்களின் தாயார் திருமதி சா .தனமணி சாமிதுரை வயது 70 என்பவர் உடல் நலக்குறைவால்.14 /01/ 2023 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். 


அவருடைய உடலை மற்றவருக்கு உதவும் வகையில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்தானமும் .பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு உடல் தானமும் நேற்று 15/01/2023 மாலை 5.00 மணி அளவில் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் குடும்ப உறவினர்கள் LEP.சுரேஷ்குமார் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர் உடன் இருந்தனர் இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

No comments:

Post a Comment

*/