கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பெருமாள் ஏரிக்கரை பகுதியில் குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா, உலகநாதன் ஆகியோர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தபோது
சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியே அதிவேகமாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட பொழுது காரில் வந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால்
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் பாலாஜி வயது 33 வடலூர் பூசாலி குப்பம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் மகாராஜன் வயது 27 வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் என்பது மூவரும் பெங்களூரு பகுதியில் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து குள்ளஞ்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் மூன்று இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு மேற்கொண்டு அவர்களிடமிருந்து இருந்த 200 கிலோ 55 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


No comments:
Post a Comment