கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ளது கருப்பசாமிக் கோவில்.தைமகளை வரவேற்கும் பொருட்டு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு வருவதை மகர சங்கராந்தியாக வரவேற்றுக் கொண்டாடி மகிழ்வது தமிழர்களின் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். அதன்படி இந்த கருப்புசாமி கோவிலில்நவதானியங்கள், 1000 கிலோ காய்ந்த மிளகாய் வற்றல் ஆகியவை யாகத்திலிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்தபூஜை அதர்வண வேத தேய்பிறை மஹா யாகசாலை பூஜையாகக்கூறப்படுகிறது.
மக்களை வாட்டி எடுக்கும் பசி, பஞ்சம் பட்டினி மற்றும் இயற்கை பேரிடர் ஆகியவற்றிலிருந்து நாட்டை பாதுகாக்கவும், நாட்டின் நலனைக் கருதியும் , எங்கும் அமைதி தவழவும்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டும் இந்த சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டு மந்திர உச்சாடனங்களைக் கூறி வழிபட்டனர்.


No comments:
Post a Comment