விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமாக தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயத்த பணி தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமாக தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயத்த பணி தீவிரம்.


விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமாக தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயத்த பணி தீவிரம். 


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை,நகராட்சி சார்பில் வருகின்ற மாசி மாத 14.2.2023 அன்று ஆலயத்தில் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கப்படுகிறது. 


அதனைத் தொடர்ந்து, விநாயகர் திருவிழாவான தீர்த்தவாரி, மாசி மக கொடியேற்றம், ஆறாம் திருவிழாவான விபச்சித்து முனிவருக்கு காட்சியளித்தல்,எட்டாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா,முதல் தேர் விநாயகர்,இரண்டாவது தேர் முருகர் வள்ளி தெய்வானை,மூன்றாவது தேர் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை..விருத்தகிரீஸ்வரர், நான்காவது தேர் விருத்தாம்பிகை,ஐந்தாவது தேர் சண்டீகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு,ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. 

No comments:

Post a Comment

*/