கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிகுட்பட்ட 13வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கருணாநிதி அரிமா சங்கத்திடம் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குப்பை கூடை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் தூய்மை நகர மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் குப்பை இல்லா முன்மாதிரி வார்டாக மாற்றுவதற்கு எனது குப்பை எனது பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் 13வது வார்டில் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் தாங்கள் உபயோகப்படுத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து கொடுக்க ஏதுவாக இருக்கும் வகையில் முதற்கட்டமாக 1500 குப்பை கூடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் வழக்கறிஞர் அருண் வரவேற்புரை ஆற்றினார் நகர்மன்ற உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் அரிமா சங்க தலைவர் பொறியாளர்அருள் மற்றும் நகராட்சி ஆணையர் சேகர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு குப்பை கூடைகளை வழங்கினர்.
சுகாதார அலுவலர் பூபதி மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து எடுத்துக் கூறினார். இதில் நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி அரிமா சங்க நகர செயலாளர் கல்கி சந்திரசேகர் தொழிலதிபர் அபிதா குமார் நகர வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் வழக்கறிஞர் சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் விஜய் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார் ஷகீலா ராஜா முகமது , சமூக ஆர்வலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், மற்றும் 13வது வார்டு பகுதி வாழ் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment