சோழத்தரம் எஸ் டி சியோன் பள்ளியில் கொண்டாடிய மகிழ்ச்சிப்பொங்கல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சோழத்தரம். இந்த சோழத்தரத்தில் எஸ் டி சியோன் நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் பள்ளி வளாகத்திலேயே வகுப்பு ஆசிரியைகள் அடுப்பு மூட்டி வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் தயாரித்து அத்துடன் செங்கரும்பு வாங்கி வந்து வண்ணக்கோலமிட்ட இடத்தில் கொண்டு வந்து வைத்து பள்ளியின் அனைத்து மாணவ மாணவிகளையும் வகுப்பு வாரியாக ஒரே இடத்தில் அமர வைத்தனர். மாணவ,மாணவிகள் பெரும்பாலும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி, சட்டை மற்றும் பாவாடை, தாவணியில் கலந்து கொண்டனர் அதன் பிறகு எஸ்டி சீயோன் பள்ளியின் நிர்வாகி திருமதி. சாண்ட்ரி தேவபெல் தனது கைகளால் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புப் பொங்கலை வழங்கினார்.
பள்ளி குழந்தைகள் அனைவரும் பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிப் பொங்க கோஷமிட்டவாறுபொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகி திருமதி. சாண்ட்ரி தேவபெல்லுடன் பொறுப்பாசிரியர் பாபு மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment