அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்று அரசு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர். ராமலிங்கம் மருத்துவர். அருண் அம்பேத். ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர் பின்னர் செவிலியர்கள் கரும்பு, மஞ்சள் மற்றும் பல வகையான காய்கனிகளை வைத்து புதிய மண் பானையில் பொங்கல் பானையில் பச்சரிசிஅரிசி பொங்கலிட்டு விழாவை துவக்கினர்.
இதில் அனைத்து நிலை மருத்துவ துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment