வசந்தம் மனவளர்ச்சி குன்றியோகளுக்கான உறைவிட பள்ளியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆபத்தானபுரம் பகுதியில் உள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோருக்கான உறைவிட சிறப்பு பள்ளியில் தை பெங்கல் திருவிழா நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியில் வடலூர் நகர செயலாளர் தங்க.ஜோதிமணி மற்றும் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் து.விரசெல்வன் ஆகியோர் கலந்துகொண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் 34 ஆதரவற்ற மன வளர்ச்சிகுன்றிய மாணவர்களுடன் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினார்கள்
மேலும் மாணவர்களை இசையுடன் நடனமாடி உற்சாகமாக பொங்கலோ பொங்கல் என்ற கோஷம் எழுப்பி தை திருநாளை வரவேற்றனர்.

No comments:
Post a Comment