மங்களூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழில்பயிற்சி நிலையம் துவக்க விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா மங்களூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அறுவழுத்தின்படி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் T. ஜான்போஸ்கோ வரவேற்புரை வழங்கினார்.
மங்களூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் KNT.சுகுணா சங்கர் ஒன்றிய கழக செயலாளர் மற்றும் ஆட்மா குழு தலைவர் பா.செங்குட்டுவன், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம்,நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, திட்டக்குடி நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் VPP.பரமகுரு ,மங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமு, மங்களூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா ராஜசேகர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழுப்புரம் மண்டலம் நிர்வாக அலுவலர், பயிற்சி அலுவலர் உட்பட அனைத்து அரசு தொழில்நுட்ப நிலையம் முதல்வர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மங்களூர் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் பு.அழகன் விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.



No comments:
Post a Comment