புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் பஸ் கண்ணாடி மீது கல் வீச்சு இருவர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 January 2023

புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் பஸ் கண்ணாடி மீது கல் வீச்சு இருவர் கைது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் பஸ் கண்ணாடி மீது கல் வீச்சு இருவர் கைது.


மயிலாடுதுறையிலிருந்து சேலம் நோக்கி இரவு 2 மணி அளவில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆலயமணி இயக்கி சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகே பேருந்து வந்த போது, அங்கு சாலைக்கு இடையூறாக நடந்துச்சென்று கொண்டிருந்த 3 போதை ஆசாமிகள் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தகராறு செய்துள்ளனர்.


இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அவர்களை துரத்து முயன்ற போது, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்து கண்ணாடி மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இதனால் பேருந்தில் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.


இதனையடுத்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடிய போது மணவாள நல்லூரை சேர்ந்த அன்புச்செல்வன் என்ற மூசா (20), சரண் என்ற அப்பு (20), ஆகிய இருவரை கைது செய்தனர் தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/