கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ந. கங்கா தேவி பல்வேறு சமூக சேவை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடலூரில் உள்ள குளோபல் மனம் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உண்டு விரட்ட உண்டு உறைவிட சிறப்பு பள்ளியில் புத்தாண்டை கொண்டாடினார்.
அப்போது குழந்தைகளுடன் பட்டாசு வெடித்தும் கேக்கு வெட்டி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடினார். மேலும் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கி மகிழ்ந்தார் நிகழ்ச்சியின் போது குளோபல் பள்ளி நிறுவனர் ஆர் .ஏ கோபால் ,எம் குமுதம் சமூக ஆர்வலர்கள் எஸ்.பி ரமேஷ், கடலூர் மனோகர், விஜயபாஸ்கர் ,சலீம், ஷீபா ஆகியோர் மாணவ மாணவிகளுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் புத்தாண்டு கொண்டாடினார்.
No comments:
Post a Comment