வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
தமிழரின் தைத்திருநாளை கொண்டாடும் பொருட்டு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் வி .சிவகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து மண்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் கும்மியடித்தனர்.
பின்னர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அஞ்சலி மற்றும் சந்தியா ஆகிய இரு மாணவிகளும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகிய சிலம்பம் சுற்றி மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் மாணவர் மாணவிகள் சமத்துவ பொங்கல் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஐ.வண்ணமுத்து பேராசிரியர்கள் மணிவண்ணன், பாண்டியன் ஆறுமுகம் ,அருட்செல்வன் எழில்மதி ,பார்த்திபன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments:
Post a Comment