வடலூர் ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை - ஆடுகள் குறைவாக வந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 January 2023

வடலூர் ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை - ஆடுகள் குறைவாக வந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்.

வடலூர் ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆடுகள் குறைவாக வந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்


கடலூர் மாவட்டம் வடலூரில் வாராவாரம் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும் இங்கு வடலூர், குறிஞ்சிப்பாடி, வடக்கு மேலூர், கல்குனம், கருங்குழி, வடக்குத்து, உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த வரும் கால்நடையான ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.


இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆட்டு சந்தை விடியற்காலை 2 மணியிலிருந்து துவங்கப்பட்டது இங்கு வியாபாரிகள் கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்கிச் சென்றனர் ஒரு ஆட்டின் குறைந்த விலை 4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 8000 வரை விலையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன ஒரு கோடி ரூபாய் ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது இங்கு போதுமான அடிப்படை வசதியான மின் விளக்கு, குடிநீர் ஆகிய வசதி இல்லாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் வருவது குறைந்துள்ளன.

No comments:

Post a Comment

*/