ஸ்ரீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வர்த்தக சங்கம் சார்பாக காசோலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 January 2023

ஸ்ரீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வர்த்தக சங்கம் சார்பாக காசோலை

ஸ்ரீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வர்த்தக சங்கம் சார்பாக காசோலை வழங்கப்பட்டது. 


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 15 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 லட்ச ரூபாய் யாரிடம் உதவி கேட்பது என்ற நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் குமரேசன் பெற்றோர் ஆசிரியருக்காக சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி அணுகிய நிலையில் மாணவ மாணவிகள் நலன் கருதி பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன்  ஒரு லட்ச ரூபாய் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செங்கோல் ஒரு லட்சம் ரூபாய் வர்த்தக சங்க மாவட்டத் தலைவர் ரவி தலைவர் சோக்கு சிவானந்தம் பூவராக மூர்த்தி சுமார் பத்துக்கும் மேற்பட்ட வர்த்தகள் உதவி தலைமை ஆசிரியர் பொன்மணியிடம் ரூபாய் 50 ஆயிரத்திற்கு காசோலை வழங்கப்பட்டன. 


இந்நிலையில் இந்த பள்ளிக்கு அனைவரும் உதவ முன்வருவது இதனால் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்ட கூடும் அதோடு மாணவ மாணவிகள் வெளியில் அமர்ந்து படிப்பதற்கு இனி அவசியம் இல்லை என தெரிவித்தார் அதோடு தலைமை ஆசிரியர் முதல் மற்ற ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

*/