ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவாக விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கொடியினை ஏற்றிவத்தார்.
இந்திய ஒற்றுமை நடைபயணம் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய நடைபயணம் இன்று ஸ்ரீ நகரில் நிறைவு பெறுவதையொட்டி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கட்சி கொடியினை ஏற்றி வைத்து நிறைவு செய்தார்,
அதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, பின்னர் மகாத்மா காந்தியின் 73 வது நினைவு தினத்தை ஒட்டி காந்தி சிலை முன்பு 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். உடன் நகர தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment