கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூர் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ நல்லதங்காள் ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீரோதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் நான்கு கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்று, மேளதாளத்துடன் புனித நீர் கலசத்தை கோயிலை சுற்றி வலம் வந்து எடுத்துச் சென்று, அம்மன் மூலவர் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டது. அதன் பிறகு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பிறகு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவை விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஸ்ரீ நல்ல தங்காள் வகையறாக்கள், கோ.ஆதனூர் மற்றும் வேட்டக்குடி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment