சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை காலதாமதமின்றி நடத்த வேண்டும் பொது தீட்சிதர்களுக்கு காங்கிரஸ் பிரமுகர் ஜெமினி ராதா வேண்டுகோள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
சிதம்பரம் நடராஜர் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மார்கழி மாதங்களில் தேர் தரிசனம் நடைபெறுவது வழக்கம். கடந்த மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நேரம் தெரியாத காரணத்தால் காலை 10 மணி அளவில் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் மாலை ஆறு மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இயற்கை உபதைகளுக்கு உள்ளாகியும் ஒரு சிலர் மயக்கம் அடைந்து உடல்நிலை பாதிக்க பட்டதும் காண முடிந்தது.
எனவே பக்தர்களின் நலன் கருதி ஆகம விதிகளின்படி வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவை காலதாமதமின்றி பொது தீட்சிதர்கள் நடத்த வேண்டும்.
மேலும் கோயில் அருகே தற்காலிக அவசர சிகிச்சை முதலில் உதவி மையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment