கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் சுரங்கம் 2 ல் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகின்றது.
இங்கு இருக்கும் மின் மோட்டார் களுக்கு கேபிள்கள் மூலம் மின்சாரம் செலுத்தப்பட்டு மோட்டார்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று மோட்டார்களுக்கு மின்சாரம் செல்லும் கேபிளை நடுவில் வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்ட கும்பலை பணியில் இருந்த நீர் கட்டுப்பாட்டு பிரிவு துணை மேலாளர் பாக்கியநாதன் மற்றும் உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் உதவியுடன் பிடித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பெரியாக்குறிச்சியை அடுத்த கீழ்பாதி புதுநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் வயது 29 என்பதும் சுரங்கம் 2 நீர் மேலாண்மை பிரிவில் கேபிள்களை திருடி கடையில் விற்க முயற்சித்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ரூபாய் 30,000 மதிப்பிலான கேபிள்களை பறிமுதல் செய்து அவருடன் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment