கடலூர் மாவட்டம் பழைய நெய்வேலி பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மூத்த மகள் செந்தமிழ் நிஷா வயது 19 பாலு தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் பழைய நெய்வேலி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் எதிர் வீட்டில் வசிக்கும் நந்தினி என்பவரின் வீட்டில் செல்வ நிஷா கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நந்தினி என்பவரின் சகோதரர் வேலு என்பவர் வீட்டு வேலைக்கு வந்த செல்வ நிஷாவுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் செல்வ நிஷாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 30.12.2022 இன்று அன்று பாலு செல்வ நிஷாவை திருமணம் செய்வதாக கூறி தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது உறவினர்களுடன் சேர்ந்து செல்வ நிஷாவை கத்தியை காட்டி மிரட்டி வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து அவரை அழைத்து வந்து தனது வீட்டின் அருகே ஆள் அரவமற்ற இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த செல்வநிஷாவின் தந்தை இதுகுறித்து வேலு மற்றும் அவரது உறவினரிடம் கேட்ட பொழுது ஜாதி பெயரை சொல்லி ஆபாச வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
பின்னர் செல்வா நிஷாவின் தந்தை மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் புகார் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செல்வ நிஷா மற்றும் அவரது தந்தை பாலு ஆகியோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தின் முன் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்
பின்னர் செல்வநிஷாவை கத்தியை காட்டி மிரட்டிய வேலு மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்
தமிழகத்தில் பெண்களுக்கு என்று காவல்துறை மூலம் காவலன் செயலி மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல விழிப்புணர்வு காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாலியல் தொடர்பான புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல்துறையினர் தயக்கம் காட்டி வருவது ஏன் என்ற கேள்வி செல்வ நிஷா அவர்களின் உறவினர் மத்தியில் எழுந்துள்ளது
மேலும் கொலை மிரட்டல் விடுத்த வேலு என்பவரால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் முன் அவரை கைது செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது செல்வ நிஷாவின் கோரிக்கையாக உள்ளது
No comments:
Post a Comment