கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் செல்லும் சாலையில் உள்ள அருள்மிகு ஜெகமுத்து மாரியம்மன்ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக, கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் நான்கு கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்று,மேளதாளத்துடன் புனித நீர் கலசத்தை கோயிலை சுற்றி வலம் வந்து எடுத்துச் சென்று, அம்மன் மூலவர் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டது. அதன் பிறகு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பிறகு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவை விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும்,அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனுக்கு 23 ஆம் ஆண்டு மாலை அணிதல் நடைபெற்று வருகிறது.01-02-2023 வருகிற புதன்கிழமை அன்று அருள்மிகு பழமலைநாதர் ஆலயத்தில் ஸ்ரீ சமயபுர பக்தர்கள் மண் சோறு உண்ணுதல் விழாவும்,நான்காம் தேதி அன்று இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும்,ஐந்தாம் தேதி பக்தர்கள் ஸ்ரீ சமயபுரம் பயணம் செய்யும் நிகழ்ச்சியானது கோயில் பூசாரி பாலு தலைமையில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment