காணும் பொங்கலை முன்னிட்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நெய்வேலி சரக காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி வார்டு 11 பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றனர்
வடலூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் உதவியாளர் இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்
பின்னர் மாணவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பிஸ்கட் சாப்பிடுதல், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல் ,உரியடி , கரும்பு சாப்பிடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது
நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நெய்வேலி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஷ்ணுபிரியா குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வை மற்றவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெய்வேலி சரக காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்


No comments:
Post a Comment