கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி அவர்கள் தலைமையேற்று பொங்கல் விழாவை துவக்கி வைத்தார் அண்ணாமலை பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் துணைத் தலைவர் தமிழ்செல்வி அவைத்தலைவர் முத்துக்குமார் முன்னிலை வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சி அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் சுகாதார பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி வழங்கினார் மற்றும் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்க. அன்பரசு வேலாயுதம் வேலூ சந்திரா விஜயலட்சுமி தேவிகா மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ் ஆனந்தன் செல்வம் கருணாநிதி சம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment