கிள்ளை பேரூராட்சி மற்றும் கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் பள்ளி இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 January 2023

கிள்ளை பேரூராட்சி மற்றும் கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் பள்ளி இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல்

கிள்ளை பேரூராட்சி மற்றும் கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் பள்ளி இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிதம்பரம் சார்-ஆட்சியர் சுவேதா சுமன் IAS அவர்கள் பொங்கல் பானையில் அரிசி போட்டு சர்கரை பொங்கல் செய்தார், பானை பொங்கியதும் பழங்குடி மாணவச்செல்வங்கள்" பொங்கலோ பொங்கல் " என்று கோஷமிட்டனர், பிறகு பழங்குடி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் உமா அவர்கள் வரவேற்றார், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் முன்னிலை வகித்தார், செயல் அலுவலர் த செல்வி, ராம்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலைஞர் நகர் SMC உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் குமார் நன்றி கூறினார், ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

*/