கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 12 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 January 2023

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 12 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 12 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து கடந்த 2012 ஆம் ஆண்டு புதிதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சி துவக்கப்பட்டு இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவு பெற்று பனிரெண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி ஒவ்வொரு ஆண்டிற்கும் தலா 10 பேர் என 12 ஆண்டுகளுக்கும் 120 பேர் என்ற வகையில் ஒரு நபர் கூடுதலாக 121 நபர்கள் ரத்த தானம் கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் அக்கட்சியின் சார்பாக மாநில நிர்வாக குழு உறுப்பினர், மாநகர அமைப்புகுழு தலைவர் கண்ணன் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கடலூர் அரசு தலைமை மருத்துவமணை இரத்த வங்கி அதிகாரி மருத்துவர். குமார்,மருத்துவர் பரிமேலழகன் மற்றும் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊடகப்பிரிவை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

No comments:

Post a Comment

*/