வேப்பூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க வி.சி.க எதிர்ப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

வேப்பூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க வி.சி.க எதிர்ப்பு

வேப்பூரில் நீர்நிலை  ஆக்கிரமிப்பு  அகற்றும் பணி, அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க  வி.சி.க எதிர்ப்பு 


கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோட்டில்  குட்டையை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டி இருந்தனர் அதை ஊரக வளர்ச்சி துறை, வருவாய்துறை இணைந்து ஆக்கிரமிப்பை அகற்றியதால் பரபரப்பு நிலவியதுசென்னை - திருச்சி, கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் கூட்டுரோடு உள்ளது. இங்கு, 1.05 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு இடம் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்து வணிக கடைகள், பழக்கடைகள், மெக்கானிக் ஷெட், குடியிருப்புகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். 
இதனை அகற்ற நல்லூர் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வேப்பூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

அதன்படி, வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 21ம் தேதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்கள் 

தொடர்ந்து, ஜனவரி 30 ந் தேதி  பகல் 12:00 மணியளவில் வேப்பூர் தாசில்தார் மோகன், நல்லூர் பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமாரி, சங்கர் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், தலைமையில் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, அங்கிருந்த அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பகல் 3:45 மணியளவில் நல்லூர் ஒன்றிய வி.சி.க,  செயலாளர்  சந்தோஷ் தலைமை ஆர்ப்பாட்டம் நடந்தது.


அவர்களிடம், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தாசில்தார் மோகன், பி.டி.ஓ.,க்கள் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

அதில், உடன்பாடு ஏற்படாததால் பி.டி.ஓ., ஜெயக்குமாரி அளித்த  புகாரின் பேரில்  நல்லூர் ஒன்றிய விசிக, நிர்வாகிகள் சந்தோஷ், முத்துக்கருப்பன், அர்ஜூனன் ஆகியோரை வேப்பூர் போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து  மாலை 4:30 மணியளவில் மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment