கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசப்பரூர் கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் அருள்மிகு தாயார் சமேத ஸ்ரீதேவி பூதேவி புடனாகிய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பதினோராம் ஆண்டு ரத சப்தமி தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவில் தேர்வடத்தைப் பிடித்து தொழிலதிபர் ஈ கே சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக காலை ஐந்து முப்பது மணிக்கு திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ஹோமமும் நடைபெற்றது. மேலும் திருச்சி மற்றும் சின்ன திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் குழுவின் கோலாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆர் பாலகிருஷ்ணன் கலை செல்வி உதவிய பொது மேலாளர் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கலைச்செல்வன் ஆரம்ப சுகாதார நிலையம் கம்மாபுரம் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவில் நிர்வாக செல்வராஜ் ரெங்க இராமானுஜ தாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment