அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் கால் முறிவு போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி டு சென்னை NH பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கால் அடிபட்டு உள்ளதாக பொதுமக்கள் ராமநத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்க வந்த ராமநத்தம் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி ,வினித் குமார், தலைமைக் காவலர் சர்மா காவல்துறையினர் மானை கைப்பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரி ஆறுமுகம் மானைக் கைப்பற்றி அடிபட்ட மகனுக்கு முதலுதவி சிகிச்சை தொழுதூர் கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் அங்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அடிபட்ட மானை மேல் சிகிச்சைக்காக தொழுதூர் கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment