மனவளர்ச்சி குன்றிய மாணவருக்கு உதவிக் கரம் நீட்டிய புரசை உதவும் கைகள் அறக்கட்டளை அமைப்பினர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 January 2023

மனவளர்ச்சி குன்றிய மாணவருக்கு உதவிக் கரம் நீட்டிய புரசை உதவும் கைகள் அறக்கட்டளை அமைப்பினர்

குறிஞ்சிப்பாடி அடுத்த தெற்கு பூவாணிகுப்பம் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய மாணவருக்கு உதவிக் கரம் நீட்டிய புரசை உதவும் கைகள் அறக்கட்டளை அமைப்பினர்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணி குப்பம் கிராமத்தில் வசிப்பவர் சிவகுமார் இவரது  மகன் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் புரசை உதவும் கைகள் அறக்கட்டளை நிறுவனர்  வெங்கடேசன் மற்றும் பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து தனது சேவையை பண்ருட்டி, விருதாச்சலம், குறிஞ்சிப்பாடி ,கடலூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் குமார் பரிந்துரையின் பேரில்  தொடர்ந்து செய்து வருகிறது.


இந்நிலையில் தெற்கு பூவாணிகுப்பம் பகுதியில் கடந்த 22 வருடங்களாக வாய் பேச முடியாமல்  கை கால்கள் செயலிழந்தது பாதிக்கப்பட்டு மழையினால் சேதம் அடைந்த கூரை வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் வசித்து வந்த மனவளர்ச்சி குன்றிய  மாணவனுக்கு புதியதாக மெத்தை கட்டில் தேவையான உபகரணங்கள் மற்றும் தனது தங்கையின்  கல்லூரி படிப்பிற்கு கடந்த மூன்று வருடங்களாக கல்லூரி கட்டணம் செலுத்த உதவி செய்து வருகின்றனர்.


மேலூம் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டின் மேற்கூறையை  நீக்கிவிட்டு புதிதாக கூரை அமைத்து சரி செய்து கொடுத்துள்ளனர். புரசை உதவும்கைகள் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் என்.வெங்கடேசன் மற்றும் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக மாணவனின் வீட்டிற்குச் சென்று  தேவையான உபகரணங்களை   வழங்கி அவரின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் குமார் மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர் அருண் ஆகியோர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment