கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் படித்த 120 மாணவர்கள் நேரில் பங்கேற்று
தங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து அவர்களின் ஆசியைப்பெற்றனர். கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களின் பெயரைக் கூறி, சொந்த ஊரைக் கூறி தாங்கள் இப்போது என்ன பணி செய்து கொண்டிருக்கிறோம் மற்றும் தங்கள் குடும்பம், பிள்ளைகள் அவர்களின் படிப்புகள், அவர்களின் வேலைகள் இப்படி பல்வேறு விஷயங்களை ஒவ்வொருவரும் மேடையில் வந்து பகிர்ந்து கொண்டது பார்ப்பவர்களைபரவசப் படுத்தியது.
அத்துடன் இந்த முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்கள் கூறும்போது தங்களின் மாணவர்கள் இப்படி இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்து இன்னமும் எங்களை மறக்காமல் அன்பைப் பரிமாறிக் கொள்வது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். காலை 10 மணி அளவில் தாங்கள் படித்த அதே தனியார் பள்ளியில் ஒன்று கூடிய இந்த முன்னாள் மாணவர்கள் மதிய உணவும் அங்கேயே உண்டு மாலை ஐந்து மணி வரை தங்களின் மலரும் நினைவுகளை ஒவ்வொருவரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு தங்களுக்குள்ளேயிருந்த நட்பை, பாசங்களை வெளிப்படுத்தினர்.
No comments:
Post a Comment