மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ மாதவன். இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ சந்திரசேகரன் ஓ.பி.சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராம்ராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துணை மேயர் தாமரைச்செல்வன் நகர செயலாளர் செந்தில் குடியிருப்போர் சங்கம் பொது செயலாளர் மருதவாணன் சிபிஎம் மாநகர செயலாளர் அமர்நாத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ் திராவிட கழக மாவட்ட செயலாளர் சிவகுமார் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மாணவ அணி செயலாளர் அருள் பாபு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹிம் நகர தலைவர் ஷேக் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு பொதுநல அமைப்பு நிர்வாகி குரு ராமலிங்கம் குடியிருப்போர் சங்கம் நிர்வாகிகள் தேவநாதன் பாலு பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அனைத்துக் கட்சி – குடியிருப்போர் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் கொரானா ஊரடங்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பின் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி (16179, 16180), காரைக்கால் விரைவு ரயில்கள் (16175, 16176) தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16852), உழவன் எக்ஸ்பிரஸ் ( 16865, 16866) திருப்பதி 16780 வண்டிகளும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.
கன்னியாகுமரி புதுச்சேரி (16862), மஹால் எக்ஸ்பிரஸ் (22623/22624) திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். (06121/06122) சேலம் விருதாச்சலம் விரைவு ரயில் கடலூ துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி (12083/12084) விரைவு ரயில் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்.
மயிலாடுதுறை இருந்து மைசூர்க்கு இயக்கப்படும்விரைவு ரயில் (16231, 16232) கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்கவும் விழுப்புரம் தாம்பரம் பாசஞ்சர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடலூர் - புதுவை - சென்னை இருப்பு பாதை திட்டத்தை உருவாக்கிட வேண்டும்
திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் முழுவதும் மேல் கூரை வசதி, குடிநீர், கழிப்பிடம், பயணிகள் தங்கும் ரூம், மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் எளியதாக வந்து செல்வதற்கு வசதிகள், கடலூர் துறைமுக சந்திப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கிட வேண்டும். முதியோருக்கு வழங்குப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் அமலாக்கிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரும் ஜனவரி 24 அன்று காலை 10 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் இதனை விளக்கி ஜனவரி 19 அன்று கடலூர் நகரம் முழுவதும் தெருமுனை கூட்டம் பிரச்சாரம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள், வர்த்தக அமைப்புகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment