கடலூர் மாவட்டம் வளையமாதேவி, மும்முடி சோழகன், கத்தாழை, கரி வெட்டி போன்ற பல கிராமங்களில் என்எல்சி நிர்வாகம் முன்பு கையகப்படுத்திய நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் மட்டுமே கொடுத்திருக்கிறது. ஆனால் தற்போது அதன் பக்கத்து நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் கொடுப்பதாக நிர்வாகம் கூறி இருக்கிறது. ஆனால் முன்பு கையகப்படுத்திஏக்கருக்கு ஆறு லட்சம் கொடுத்த தொகையை எங்களால் ஏற்க முடியாது என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
விவசாயிகளின் மற்றும் வீடு, மனை கொடுப்பவர்களின் கோரிக்கையான ஏக்கருக்கு ஒரு கோடி மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு நிரந்தர வேலை, மற்றும் உடனடியாக பத்திரப் பதிவு செய்து தரப்பட்டமாற்றுவீட்டுமனை இவைகளைக் கொடுப்பதாக அறிவித்தால் மட்டுமே தங்கள் நிலங்களை இடங்களை என்எல்சி நிர்வாகத்திற்கு தருவோம்.அப்படி எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் எங்கள் நிலங்களை எடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சுமார்30 கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது ஏக்கருக்கு 25 லட்சம் அத்துடன் பிறகு நிரந்தர வேலை கொடுப்பதாக என்எல்சி நிர்வாகம் கூறுவதை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று (சனிக்கிழமை) நெய்வேலியில் இருந்துதனது கட்சிக்காரர்கள் நிர்வாகிகளுடன் என்எல்சி நிர்வாகமே வெளியேறு! என்ற முழக்கத்தை முன்வைத்து பல கிராமங்களுக்கு நடைபயணமாக புறப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் கிராமத்தினர் இடையே உரையாற்றி அதைத்தொடர்ந்து கரிவெட்டி, மும்முடிசோழகன், கத்தாழை ஆகிய கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே பேசும்போது உங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி துணை நிற்கும். என்எல்சி நிர்வாகம் இங்கிருந்து ஒரு பிடி மண்ணை எடுக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அன்புமணி ராமதாஸ் உறுதிப்படக் கூறினார்.

No comments:
Post a Comment