சாலையைக் கடக்க முயன்ற முதியவர் சுற்றுலா பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 January 2023

சாலையைக் கடக்க முயன்ற முதியவர் சுற்றுலா பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !!!

சாலையைக் கடக்க முயன்ற முதியவர் சுற்றுலா பேருந்து மோதி  சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !!!




கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி மெயின் ரோட்டில் வசித்து வரும்  ராஜமாணிக்கம்      மகன் பெரியசாமி வயது 80 என்பவர் இன்று 19.01.23 தேதி அதிகாலை 05.30 மணிக்கு மேல் புவனகிரி மெயின் ரோடு  தனது வீட்டில் இருந்து புவனகிரி பங்களா அருகில் உள்ள டீ  கடைக்கு டீ குடிப்பதற்கு  செல்வதற்காக சாலையை கடக்கும் போது சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து   சிதம்பரம் நோக்கி வந்த TN. 30 .AK. 7488  என்கின்ற சுற்றுலா பேருந்து மோதி மேற்படி நபர் சம்பவ துடிதுடித்து இறந்து விட்டார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக    சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும்  விபத்து குறித்துபுவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்   பெரும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

No comments:

Post a Comment

*/