கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி மெயின் ரோட்டில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்து புவனகிரியை அடுத்த மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் வயது 31 இவர் தனது மனைவி பிரேமலதா மற்றும் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் கைக்கு குழந்தையுடன் மிராளுரிலிருந்து ஸ்கூட்டியில் சிதம்பரம் நோக்கி சிதம்பரம் அருகே உள்ள கூத்தங் கோயிலில் உறவினர் ஒருவர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது புவனகிரி பங்களா அருகில் பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியதில் பிரேமலதா வயது 26 என்பவர் சம்பவ இடத்திலே உடல் முழுவதும் நசுங்கி தன் கணவர் கண் முன்னே பலியானார்.
இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் இறந்து போன சந்திரகலாவின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கணவர் கலையரசன் மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து உள்ளனர் மேலும் தொடர் விபத்து சம்பவம் குறித்துபுவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே இடத்தில் தொடர் விபத்துக்கள் ஏற்படுத்தி இருவர் உயிர் பலியானது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியான சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

No comments:
Post a Comment