விருத்தாசலம் ஆல்ஃபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

விருத்தாசலம் ஆல்ஃபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்


விருத்தாசலம் ஆல்ஃபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு மாட்டுப் பொங்கல் விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆல்ஃபா அறக்கட்டளை நிறுவனர் ஓவியர்.முருகன் தலைமையேற்று நடத்திட சத்தியவாடி வழக்கறிஞர் சண்முகம் அவர்கள் முன்னிலையில். சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட செய்தியாளர் மாய.முனுசாமி அவர்களும்,ஓவியர் சுரேஷ் கார்குடல் கலை கலந்து கொண்டு பரிசளித்து சிறப்பு செய்தனர். 


கிராம மாணவர்களுக்கும், பெண்களுக்கும் கோல போட்டி, சிறுவர் ஓட்ட பந்தயம், பெரியவர் ஓட்ட பந்தயம், கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சி ஏற்பாட்டை சத்தியவாடி இளைஞர்கள் மிக சிறப்பான ஏற்பாட்டில் ஆடல், பாடல்,நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தி பொதுமக்களை உற்சாகப்படுத்தினார். இறுதியாக ஆல்ஃபா கல்வி அறக்கட்டளை செயலாளர் தர்பார் ராஜலஷ்மி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/