விருத்தாசலம் முல்லை நகரில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரில் திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் தை மாதத்தின் இரண்டாவது நாளாக திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது, இதனை முன்னிட்டு விருத்தாசலம் முல்லை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மணிகண்டன் தலைமை தாங்கி திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எடுத்துரைத்தார்.
ஏ கே சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் திருக்குறளில் சொல்லி இருக்க இருக்கக்கூடிய நெறிமுறைகளை கடைபிடித்து வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என சிறப்புரையுற்றினார், செய்தியாளர் சீனிவாசன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பு பரிசாக அனைவருக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment