விருதாச்சலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

விருதாச்சலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதாச்சலம் பாலக்கரையில் கரும்பு விவசாயிகளை ஏமாற்றி வயிற்றில் அடிக்கும்  திருஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அதன் நிர்வாகத்தை கண்டித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். 



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஏ சித்தூர் கிராமத்தில் அமைந்துள்ள திருஆரூரன் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக   விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்து அதற்கு உரிய தொகையினை வழங்காமல் ஏமாற்றி வருவதால் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் உரிய தொகையை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் மாநில அரசுகள் அறிவித்துள்ள கரும்பிற்கு உண்டான முழு தொகையையும் வட்டியுடன் ஒரே தவணையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிடவும் திருஆருரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜன் முறைகேடாககரும்பு விவசாயிகள் பெயரில் சுமார் 300 கோடி தேசிய வங்கியில் அடமானம் வைத்து ஏமாற்றியதை கண்டித்தும், கைது செய்து வங்கிகளின் கடனை முழுவதையும் போர்க்காலம் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து பைசல் செய்து விவசாயிகளை விடுவித்து விடவும், ஏசித்தூர் ஆலை கரும்பு விவசாயிகள் பணத்தை பிடித்தம் செய்து இதுநாள் வரை வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள கரும்பு பயிர் கடன் தொகையினை முழுவதையும் ஒரே தவணையில் வங்கியில் செலுத்திடவும், வெட்டுக்கூலி வாகன வாடகை முழுவதும் வட்டியுடன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கிடவும், 



திரு ஆருரன் சர்க்கரை ஆலை மூலம் வெளி ஆலயக்கு அனுப்பி கரும்பிற்கு உண்டான முழு கிரைய தொகையை வட்டியுடன் ஆலை நிர்வாகமே விவசாயிகளுக்கு வழங்கிடவும், விவசாயிகளை வங்கிகளில் கடன்காரன் ஆகிய ஆலை உரிமையாளர் துணை போன வங்கி அதிகாரிகள் மற்றும் கரும்பு உதவியாளர்கள் சேர்ந்து விவசாயிகளின் மீது மோசடியாக கடன் வாங்கி ஏமாற்றி அவர்களை கைது செய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கரும்பு விவசாயிகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திடவும்,


அனைத்து பேச்சு வார்த்தைகளையும் வெளிப்படை தன்மையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்தரப்பு கூட்டத்தை நடத்திடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

*/