விருத்தாசலத்தில் முந்திரியில் மதிப்புக்கூட்டுதல் சங்கிலி தொழில்நுட்பங்களை அறியும் அறிவு சார் பரிமாற்று திட்ட தொடக்க விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

விருத்தாசலத்தில் முந்திரியில் மதிப்புக்கூட்டுதல் சங்கிலி தொழில்நுட்பங்களை அறியும் அறிவு சார் பரிமாற்று திட்ட தொடக்க விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல ஆராய்ச்சி நிலையம் விருத்தாச்சலத்தில் கினியா- பிசாவ் நாட்டு பிரதிநிதி குழு உலக வங்கி நிதியுடன் முந்திரியில் மதிப்புக்கூட்டுதல் சங்கிலி தொழில்நுட்பங்களை அறியும் அறிவு சார் பரிமாற்று திட்ட தொடக்க விழா நடைபெற்றது. 



இவ்வறிவு சார் பரிமாற்று திட்ட தொடக்க விழாவில் கினியா - பிசாவ் நாட்டு பதினொரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்க பேராசிரியர் முனைவர். தியோடர் வரவேற்புரையாற்றினார்.  உலக வங்கி வேளாண் மற்றும் உணவு பயிற்சி ஆலோசகர் ஹீம்மத் பட்டேல் இவ்வறிவுசார் பரிமாற்று திட்டத்தை பற்றி விளக்கமளித்தார். உலகவங்கி முதுநிலை வேளாண் பொருளாதார ஆலோசகர் அயீபா பாத்திமா நைநே இப்பயணத் திட்ட  நோக்கத்தை பற்றி விளக்கமளித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனரக இயக்குனர் முனைவர் முருகன் சிறப்புரையாற்றினார்.  


முந்திரி உற்பத்தி மற்றும் அறுவடை பின் சார் தொழில் நுட்பங்களை பற்றி தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் முனைவர்.கா.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி இந்நிகழ்ச்சிக்கு தலையேற்று தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர். முனைவர். தவப்பிரகாஷ் நன்றியுரையாற்றினார். மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும்  வேளாண் துறை அலுவலர்கள் கலந்துதுக்கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/