கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரியாக்குறிச்சியில் உள்ள டிவைன் கிராஸ் மிஷன் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி மற்றும் நியூ லைட் ஆண்கள் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
நியூலைட் சாரிட் டபுள் டிரஸ்ட் நிர்வாகி மனநல நிபுணர் சகாயராஜா தலைமை தாங்கினார்.என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் பொது மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் சுரங்க சேமிப்பு கிடங்குகளின் முதன்மை மேலாளர் சேகரன் சிறப்புரை ஆற்றினார். மாணவ மாணவிகள் பாடல்கள் பாடி நடனமாடியும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி புது பானையில் பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இதில்
தசை பயிற்சியாளர் விஷ்ணு விழா ஏற்பாடுகளை செய்தார். பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment