ரைசிங் யூத்ஸ் பவுண்டேஷன் இந்தியா சார்பில் சமத்துவ பொங்கல் விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே பெரியார் நகரில் ரைசிங் யூத்ஸ் பவுண்டேஷன் இந்தியா சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சாதி, மத, இன வேறுபாடுகள் களைந்து தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் எனும் நோக்கில் இவ்விழா நடைபெற்றது.
விழாவில் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரேவந்த் ஆண்டனி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொருளாளர் பெனோ சுஜித் தலைமை தாங்கினார், இவ்விழாவில் வீராசாமி, உன்னிகிருஷ்ணன், ஆகாஷ் ,பெரியசாமி, யூஜின், பிரசாந்த், ஜெயப்பிரியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். ரைசிங் யூத்ஸ் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment