புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 January 2023

புதிய பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம், அதர்நத்தம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு  அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன்  இன்று 32 லட்சத்து 41 ஆயிரம் செலவில்  புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். 


பள்ளி மாணவ மாணவிகளின் தரத்தை உயர்த்த மங்களூர் ஒன்றியத்துக்கு  12 பள்ளி கட்டிடம்கள் விரைவில் கட்டப்படும் என்றும்,அதர்நத்தம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம், தார் சாலை அமைத்துள்ளோம்,  வீட்டுக்கு வீடு  குடிநீர் அமைக்கும் பணியும் விரைவில் செய்து தரப்படும் என்று கூறினார்.

(பொதுமக்கள் பேருந்து வழித்தடம் அமைக்க கோரிக்கை வைத்தனர் )3 நம்பர் பேருந்தும் 6 நம்பர் பேருந்தும் ஆலம்பாடி, அதர்நத்தம் வழியாக ஆவட்டி செல்ல விரைவில்  அதை நானே துவக்கி வைக்கிறேன் என்று உறுதி அளித்தார். பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் தரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும் என்று கூறினார். 


உடன் மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் KNT. சுகுணா சங்கர்,ஒன்றிய கவுன்சிலர் சங்கர்,மங்களூர் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் பட்டூர்  அமிர்தலிங்கம்,ஆட்மா குழு தலைவர் பா. செங்குட்டுவன், திட்டக்குடி நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர்  VPP. பரமகுரு,திட்டக்குடி நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், கிளைக் கழக செயலாளர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் ஆலம்பாடி ராஜேந்திரன், திட்டக்குடி நகர அமைப்பாளர் சேதுராமன், திட்டக்குடி கவுன்சிலர் இளையராஜா, திட்டக்குடி தொழில்நுட்ப அணி விக்னேஷ், ஆக்கனூர் இளைஞரணி பாரதிராஜா,    நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/