வெள்ளபாக்கத்தில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

வெள்ளபாக்கத்தில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

வெள்ளபாக்கத்தில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். 


கடலூர் அடுத்த வெள்ளபாக்கம் பகுதியில் குப்பை கிடங்கு எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் இணைந்துஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இப் போராட்டத்தில் வெள்ளபாக்கம் உராட்சி மன்ற தலைவர் தேவநாதன் பங்கேற்றார் மேலும் மருதாடு வரக்கால்பட்டு அழகிய நத்தம் இரண்டாயிர வளாகம், குமராபுரம் உட்பட அப்பகுதி மக்களும் மற்றும் விவசாய கூட்டமைப்பினரும் இணைந்து முப்போகம் விளையும் இப்பகுதியில்  குப்பை கிடங்குவந்தால் அப்பகுதியில் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் மேலும் நிலத்தடி நீர் மாசுபடும் என்றும் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களும் கடலூர் வட்டாட்சியர் பூபால சந்திரன்  கடலூர் மண்டலதுணை வட்டாட்சியர் அசோகன் அவர்களும் வெள்ளபாக்கம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா அவர்களும் பங்கேற்றனர் பொதுமக்களுடன் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் பின்னர் உடன்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்கள்  உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

No comments:

Post a Comment

*/